1000 சவரன்களை சுருட்டியதா நகை அடகு நிறுவனம்? - வாடிக்கையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்; கரூரில் அதிர்ச்சி!

கரூர் பள்ளப்பட்டியில் செயல்பட்டு வரும் மணப்புரம் கோல்ட் லோன் நிறுவனம்
கரூர் பள்ளப்பட்டியில் செயல்பட்டு வரும் மணப்புரம் கோல்ட் லோன் நிறுவனம்

கரூர் அருகே தனியார் நகை அடகு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த ஆயிரம் சவரன் நகைகள் மாயமானதாக கூறி, முதலீடு செய்தவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டியில் மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தின் கிளை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2022ம் ஆண்டு புதிய திட்டம் ஒன்று துவங்கப்பட்டது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒரு சவரன் நகையை நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதற்கு வட்டியாக மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளிப்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இத்திட்டத்தின் கீழ் தங்களது தங்க நகைகளை மணப்புரம் நிறுவனத்தில் முதலீடு செய்தததாக கூறப்படுகிறது.

முதலீடு செய்த தங்கம் மாயம் என வாடிக்கையாளர்கள் புகார்
முதலீடு செய்த தங்கம் மாயம் என வாடிக்கையாளர்கள் புகார்

இதையடுத்து கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக மாதாமாதம் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான தொகை வங்கியில் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள், நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் இடமாறுதலாகி சென்றுவிட்டதால் பணம் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியதாக தெரிகிறது.

காவல்துறையினர் நிதி நிறுவனத்தில் விசாரணை
காவல்துறையினர் நிதி நிறுவனத்தில் விசாரணை

இருப்பினும் முறையான பதில் இல்லாததால் முதலீடு செய்திருந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று மணப்புரம் நிதி நிறுவன அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஊழியர்கள் உரிய பதில் அளிக்காததால், பெண்கள் உட்பட முதலீட்டாளர்கள், அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தங்கள் பெயரில் வைக்கப்பட்ட நகைகளை வேறு பெயருக்கு மாற்றி மோசடி நடைபெற்றிருப்பதாகவும், இது போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ள ஆயிரம் சவரன் நகைகள் மாயமாகி இருப்பதாகவும், பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தற்போது இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in