அதிர்ச்சி: பாலியல் பலாத்காரம் செய்து பழங்குடி பெண் நரபலி?

புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் செருப்பு, காதணி.
புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் செருப்பு, காதணி.

நாக்பூரில் பழங்குடியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

குற்றம்
குற்றம்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள வாட்கான் குஜார் மற்றும் கும்கான் இடையில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள புதரில் 30 வயது இளம்பெண் உடல் கிடப்பதாக ஹிங்கனா காவல் துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார், அந்த இடத்தில் சென்று பார்த்த போது, அப்பகுதி முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது. பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த பெண் புதிய சேலை அணிந்திருந்திருந்ததுடன், தலையில் செம்பருத்திப்பூ அணிந்திருந்ததால், அமாவாசை இரவில் அவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

மேலும், அந்த புதரில் ஆணுறை பாக்கெட்டுகள், தங்க முலாம் பூசப்பட்ட காதணி, புதிய செருப்பு, பிளேடு ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வு
புலனாய்வு

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், " அந்த இளம்பெண் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்றும் திருமணமானவர் என்றும் தெரிகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம்.

புதுசேலை, ஜாக்கெட் அணிந்திருந்த அந்த பெண் இடது கையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடி அல்லது கிராமப் பெண்களிடையே உள்ள வழக்கமான வட்ட வடிவ பச்சை குத்தப்பட்டுள்ளது" என்றனர். இந்த சம்பவம் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in