நகை, பணம் பறிமுதல்... அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அபிராமி ராமநாதன்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அபிராமி ராமநாதன்

வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் தொடர்பாக தொழிலதிபர் அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட், பைனான்சியர் மற்றும் தொழிலதிபர் அபிராமி ராமநாதன் அலுவலகம், இல்லம் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அபிராமி ராமநாதன்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அபிராமி ராமநாதன்

இந்நிலையில் தொழிலதிபர் அபிராமி ராமநாதனின் மயிலாப்பூரில் உள்ள வீடு, போயஸ் கார்டனில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அபிராமி ராமநாதன் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அபிராமி ராமநாதனை இன்று காலை வீட்டிலிருந்து அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 அபிராமி ராமநாதன்
அபிராமி ராமநாதன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in