
சென்னை மாநகராட்சி எச்சரித்தும் மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளை தெருவில் சுற்றித்திரிய விடுகிறார்கள், தட்டிக் கேட்கும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள் என ஆணையர் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி சென்ற சிறுமியை மாடு முட்டிய தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து சென்றனர். அவ்வாறு மாடுகளை பிடிக்கும் போது உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி கூட்டத்தில் மாடுகளை சாலையில் விட்டால் மாநகராட்சியின் சார்பில் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டியதில் கஸ்தூரி ரங்கன் என்ற முதியவர் காயம் அடைந்துள்ளார். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் முதியவர் கஸ்தூரி ரங்கன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதியவரை முட்டிய மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து ஐஸ் அவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஆணையர் ராதாகிருஷ்ணன், ‘’தெருவில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. அதனால் மாட்டின் உரிமையாளர்கள் தான் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எடுக்காதப்பட்சத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகளை குண்டர்களைக் கொண்டும், கும்பலாக சேர்ந்து கொண்டும் மிரட்டுகிறார்கள், இதெல்லாம் தவறான செயல் என்பதை உரிமையாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!
ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!
பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?