நடத்தையில் சந்தேகம்... கல்லால் அடித்து இளம்பெண் கொலை: தூக்குப்போட்டு கணவனும் தற்கொலை!

நடத்தையில் சந்தேகம்... கல்லால் அடித்து இளம்பெண் கொலை:  தூக்குப்போட்டு கணவனும் தற்கொலை!

தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனூர் தாலுகா தித்திகி கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன்னா. இவருக்கு கவிதா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாகவே நகர்ந்துள்ளது. திடீரென தன் மனைவியின் நடத்தையின் மீது பீமன்னாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே போல, பீமன்னா மீது கவிதாவிற்கும் சந்தேகம் ஏற்பட்டது.

இதன் காரணமாக குடும்பத்தின் நிம்மதி குலைந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே போல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பீமன்னா, தனது மனைவி கவிதாவை கல்லால் அடித்துக் கொலை செய்தார்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை, அப்பகுதியில் உள்ளவர்கள், பீமன்னா உடல் மரத்தில் தொங்குவதைப் பார்த்து பாலகனூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதன் காரணமாக விரைந்து வந்த போலீஸார், மரத்தில் இருந்து பீமன்னா உடலை இறக்கினர். இதன் பின் அவர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது கவிதா கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in