பகீர்... பாலத்தில் மோதி நொறுங்கிய கார்; கணவன், மனைவி பலி... உயிருக்கு போராடும் 4 குழந்தைகள்

பாலத்தில் மோதி நொறுங்கிய கார்
பாலத்தில் மோதி நொறுங்கிய கார்

தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 குழந்தைகள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலங்கானாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் ராவ். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் சகோதரர்களின் இரண்டு குழந்தைகளுடன் சொகுசு காரில் கம்பம்- சூர்யாபட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றிருக்கிறார். கார் தெலங்கானா மாநிலம் கம்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் சென்று அங்கிருந்து பாலத்தின் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் நெருங்கியது.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். குழந்தைகள் 4 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணவன், மனைவி உடல்களை மீட்டதோடு, காயமடைந்த குழந்தைகளையும் மீட்டு ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிரே வாகனங்கள் வராத நிலையில் கார் விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in