‘வேகமாக கார் ஓட்டியதில் மனைவி இறப்புக்கு நானே காரணமாகிவிட்டேன்’ போலீஸிடம் தன் மீதே புகார் கொடுத்த அதிசயக் கணவர்

கார் விபத்து
கார் விபத்து
Updated on
2 min read

‘அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதில் என் மனைவியின் இறப்புக்கு நானே காரணமாகி விட்டேன்’ என்று தன் மீதே காவல்நிலையத்தில் வழக்கு பதிந்ததில் கவனம் ஈர்த்திருக்கிறார் ஒரு அதிசயக் கணவர்.

குஜராத்தை சேர்ந்த ஒரு தம்பதி கோயிலுக்குச் சென்று திரும்பும்போது, நேரிட்ட விபத்தில் மனைவி பரிதாபமாக இறந்தார். அந்த துக்கத்தை தாங்க இயலாத கணவர் ‘அலட்சியம் மற்றும் அதிவேகமாக நான் வாகனம் ஓட்டியதே, விபத்துக்கு காரணம்’ என புகார் அளித்ததோடு, எப்.ஐ.ஆர் பதியவும் ஏற்பாடு செய்துள்ளார்.

விபத்து
விபத்து

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் பரேஷ் தோஷி. 55 வயதாகும் இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஞாயிறு அன்று தனது மனைவி அம்ரிதாவுடன் அப்பகுதியிலுள்ள அம்பாஜி கோயிலுக்கு காரில் சென்றுள்ளார். அங்கே பிரார்த்தனை முடித்து திரும்பும்போது, கெரோஜ்-கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் டான் மஹுடி கிராமத்திற்கு அருகே அந்த கோர விபத்து நேரிட்டது.

மனைவியிடம் பேசியபடி வேகமாக காரை செலுத்தி வந்திருக்கிறார் பரேஷ் தோஷி. கோயிலுக்கு சென்ற இடத்தில் கூட்டம் அதிகமிருந்ததால், அவர்கள் தரிசனம் பெறுவதற்கு கூடுதல் நேரமாகி விட்டது. ஞாயிறு தினமும் அதுவுமாக பல்வேறு பணிகளை திட்டமிட்டிருந்த பரேஷி, அவசரமாக அவற்றை முடிப்பதற்காக வேகமாக வீடு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் அவர்களுக்கான கெட்ட நேரம் ஒரு நாய் வடிவில் குறுக்கே பாய்ந்தது.

காரின் குறுக்கே திடீரென பாய்ந்த தெருநாயால், காரை ஓட்டிவந்த பரேஷி பதற்றம் அடைந்தா. நாய் மீது கார் மோதாமலிருக்க காரை சற்றே ஒடித்தார். அப்போது காரின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்ததால், சாலையின் குறுக்கிலிருந்து கான்கிரீட் தடுப்பின் மீது கார் பாய்ந்தது. இந்த விபத்தில் பரேஷின் மனைவி படுகாயமடைந்தார். விபத்துக்குள்ளான காரின் ஆட்டோ லாக்கிங் மெக்கானிசம் காரணமாக, படுகாயமடைந்த மனைவியை காரிலிருந்து உடனடியாக மீட்பதிலும் பரேஷி தடுமாறிப் போனார்.

விபத்து - கணவன் மனைவி
விபத்து - கணவன் மனைவி

அதன் பிறகு ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், மருத்துவர்களின் உயிர்காக்கும் சிகிச்சை பயனளிக்காது மனைவி அம்ரிதா, கணவர் பரேஷி கண்முன்பாகவே துடிதுடித்து இறந்துபோனார். கனத்த இதயத்துடன் மனைவிக்கான இறுதிச் சடங்குகளை செய்து முடித்த பரேஷியால், குற்ற உணர்ச்சியை தாங்க முடியவில்லை. இன்னும் சற்று நிதானமாகவும், கவனமாகவும் காரினை செலுத்தியிருந்தால் விபத்து ஏற்படாது தவிர்த்திருக்கலாமோ என்று உள்ளுக்குள் குமைந்தார்.

பின்னர் ஒரு முடிவோடு காவல் நிலையம் சென்றவர், தனது அலட்சியம் மற்றும் அதிவேகம் காரணமாகவே தனது மனைவி விபத்துக்குள்ளாகி இறந்துள்ளார். எனவே தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு பதிந்திருக்கிறார். போலீஸாரும் அந்த கணவரின் உணர்வுகளை புரிந்துகொண்டு முதல் தகவல் அறிக்கை பதிந்து சட்டப்படியான விசாரணைகளை தொடங்கி உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in