விழுப்புரம் அருகே பொதுக் கிணற்றில் மனித மலம் கலப்பா?... அதிகாரிகள் அதிரடி ஆய்வு!

குடிநீர் எடுக்கும் பொதுக்கிணற்றில் கிடந்த தேன் அடைகள்
குடிநீர் எடுக்கும் பொதுக்கிணற்றில் கிடந்த தேன் அடைகள்

விழுப்புரம் அருகே திறந்தவெளி கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் கிணற்றில் இருந்தது தேன் அடை என விளக்கம் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கே.ஆர்.பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அருகாமையில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று காலை, இந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர். சிலர் அருகில் உள்ள கிணற்றுக்குள் சென்று பார்த்த போது அதன் உள்ளே அடையாளம் காண முடியாத பொருட்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிணற்றுக்குள் மனித மலம் கலக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அப்பகுதி மக்களிடையே பரவியது.

கே.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி பொதுக்கிணறு
கே.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி பொதுக்கிணறு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, உடனடியாக அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார். விரைந்து சென்ற அதிகாரிகள் கிணற்றில் இருந்த பொருட்களை எடுத்து ஆய்வு செய்தனர்.

அப்போது, அது மனித மலம் அல்ல என்பதும், தேன் அடை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிணற்றின் மீது இரும்பு கம்பி வேலி அமைத்து குப்பைகள் உள்ளே விழுகாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ரவிக்குமார், ’விரைந்து நடவடிக்கை எடுத்து விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டுக்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கையாள வேண்டும் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in