ஆசிட் குடித்து அரசு ஊழியர் தற்கொலை... அதிகாரிகள் டார்ச்சர் காரணமா?

தற்கொலை செய்த வாசிம் சவுத்ரி
தற்கொலை செய்த வாசிம் சவுத்ரி

ராய்ச்சூரில் அதிகாரிகளின் டார்ச்சரால் நிலப்பதிவேடு அலுவலக ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ச்சூர்
ராய்ச்சூர்

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.சி அலுவலகத்தில் நிலப்பதிவேடு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியவர் வாசிம் சவுத்ரி(36). இவர் ரெய்ச்சூரில் உள்ள மகாத்மா காந்தி ஸ்டேடியம் அருகே உள்ள நீச்சல் குளத்திற்குச் சென்றார்.

அங்கு குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்தார். இதனால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருந்த வாசிம் சவுத்ரி சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ராய்ச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலுவலக மேலதிகாரிகளின் நெருக்கடியால், வாசிம் சவுத்ரி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், ஆசிட் குடித்து இறந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

ஆனால், அவரைக் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைக்கப்பட்டுள்ளதாக வாசிம் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் இவ்வழக்கை போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகளின் நெருக்கடியால் நிலப்பதிவேடு அலுவலக ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்த சம்பவம் ராய்ச்சூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in