
தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கெட் மற்றும் தங்க சங்கிலியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு மஸ்கட் வழியாக ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்றிரவு வந்துள்ளது. அப்போது, பயணிகளிடம் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் வெளிநாட்டு பயணி ரியாத் என்பவரின் நடவடிக்கை சந்தேகப்படும்படி இருந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் அதிகாரிகள் சோதனை செய்து இருக்கின்றனர்.
அப்போது, அவரிடம் இருந்து இரண்டு தங்க பிஸ்கெட், 311 கிராம் தங்க சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள், பின்னர் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!