வேலை செய்யச்சொல்லி கண்டித்த வங்கி மேலாளர்... கூலிப்படை மூலம் ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண் உதவி மேலாளர்!

வேலை செய்யச்சொல்லி கண்டித்த வங்கி மேலாளர்... கூலிப்படை மூலம் ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண் உதவி மேலாளர்!

நாமக்கம் மாவட்டத்தில் வங்கி மேலாளரை கொல்ல வங்கியில் பணிபுரிந்த பெண் உதவி மேலாளரே திட்டம் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி நடராஜபுரத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் நாமக்கல் கடைவீதியில் உள்ள முன்னணி வங்கியில் முதுநிலை மேலாளராக இருந்து வருகிறார். இவர் வங்கி இருக்கும் பகுதிக்கு அருகே தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார். தொடர் விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு சென்று வருவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கோபிநாத் மேலாளராக உள்ள வங்கிக்கு உதவி மேலாளராக கரூரை சேர்ந்த காவ்யா என்பவர் பணியில் சேர்ந்தார். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது.

உதவி மேலாளராக பணியில் சேர்ந்த காவ்யா, முதன்மை மேலாளர் கொடுக்கும் பனிகளை சரியாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் எனவும், அண்மையில், காவ்யாவை, ஒழுங்காக வேலை செய்யுமாறு முதன்மை மேலாளர் கோபிநாத் கடிந்து கொண்ட ப்ன்தாக தெரிகிறது.

பெண் உதவி மேலாளர்  காவ்யா
பெண் உதவி மேலாளர் காவ்யா

இதனால் ஆத்திரமடைந்த காவ்யா, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி மதியம், வீட்டுக்கு சாப்பிட்ட சென்ற கோபிநாத்தை அடையாளம் தெரியாத இருவர் வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாமக்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் வங்கியின் உதவி மேலாளரை அழைத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கத்திக்குத்து
கத்திக்குத்து

விசாரணையின் படி, வங்கி முதன்மை மேலாளர் கோபிநாத் மீது ஏற்கெனவே கோபமாக இருந்த காவ்யா, இதுகுறித்து தனது ஊருக்கு சென்றபோது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள், கூலிப்படையை சேர்ந்த 3 பேரை அழைத்துப் பேசி கோபிநாத்தை கொல்ல திட்டமிட்டனர். இதற்காக ரூ.45 ஆயிரம் பேசி பணம் கூலிப்படைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கரூரில் இருந்து வந்த கூலிப்படையினர் மூவர், வங்கி முதன்மை மேலாளரை கண்காணித்து, கடந்த 18-ஆம் தேதி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், உதவி மேலாளர் காவ்யா, அவரது மாமாவான சிவக்குமார், கூலிப்படையை சேர்ந்த செல்லீஸ்வரன், பார்த்திபன், தினேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!

போதை ஊசியால் இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் தொடரும் சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in