ஷாக்... ஆடு திருட்டைத் தடுக்க முயன்ற தந்தை, மகன் வாகனம் மோதி கொலை: மேலும் இருவர் கவலைக்கிடம்!

ஆடுகள்
ஆடுகள்

ஆடு திருட்டைத் தடுக்க முயன்ற தந்தை, மகன் காரால் மோதிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுகள்
ஆடுகள்

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் மாவட்டம், சோஜானி கிராமத்திற்கு மூன்று பேர் கொண்ட கும்பல் ஆடு திருட நேற்று வந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டனர். அப்போது 2 ஆடுகளைத் திருடிக் கொண்டு காரில் அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.

இதனால் அவர்களை மடக்கி பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர். ஆடுகள் திருடுபோனது குறித்து கிராமம் முழுவதும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து லம்கானா கிராமத்தின் உள்ள சாலையில் காலி மண்ணெண்ணெய் டிரம்களை வைத்து பொதுமக்கள் வேலி அமைத்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஆடு திருடர்கள், அந்த காலி டிரம்கள் மீது வாகனத்தை வேகமாக மோதினர். இதனால் காலி டிரம்கள் பறந்து தஹிலால், சோனேலால், ராஜ் மற்றும் ஆகாஷ் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியே முழுவதும் பரபரப்பை ஏற்பட்டது. ஆனால், மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது.

சிஹோரா
சிஹோரா

இதனால் காயமடைந்தவர்களை கிராமத்தினர் மீட்டு சிஹோரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தஹிலால், சோனேலால் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்த போலீஸார், மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறிதுது டிஎஸ்பி சூர்யகாந்த் சர்மா கூறுகையில், "ஆடு திருடர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க தடுப்புகளாக மண்ணெண்ணெய் டிரம்களை மக்கள் வைத்துள்ளனர். இவற்றில் வாகனத்தைக் கொண்டு ஆடு திருடர்கள் மோதியதில், காலி டிரம்கள் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் தந்தை, மகன் ஆவார்கள். மேலும் இருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆடு திருடர்களைத் தேடி வருகிறோம்" என்றார்.

ஆடு திருட்டைத் தடுக்க முயன்ற இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in