போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலரில் வந்த மர்மநபர்... காதலர்களிடம் 7 சவரன் நகையைப் பறித்துச் சென்றதால் பரபரப்பு!

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலரில் வந்த மர்மநபர்... காதலர்களிடம் 7 சவரன் நகையைப் பறித்துச் சென்றதால் பரபரப்பு!

சென்னையில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற போலி போலீஸ்காரரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் ஜூஸ் கடை உள்ளது. நேற்று மாலை கல்லூரி முடிந்து காரில் வந்த காதல் ஜோடி ஒன்று காரை நிறுத்தி விட்டு அந்த கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் அந்த காதல் ஜோடியிடம் தான் போலீஸ் என்றும் மப்டியில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த நபர் காதல் ஜோடியிடம் நகைகளைக் கழட்டி தருமாறு என கூறியதுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் வந்து இது உங்களுடைய நகைகள் தான் என எழுதி கொடுத்து வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் அணிந்திருந்த செயின் உள்ளிட்ட 7 சவரன் தங்க நகைகளை அந்த நபரிடம் கழட்டி கொடுத்துள்ளனர்.

அந்த நகையைப் பெற்றுக் கொண்ட அந்த அடையாளம் தெரியாத நபர், காவல் நிலையம் வருமாறு கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

உடனே அந்த காதல் ஜோடி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் சென்று விசாரித்த போது அது போன்ற காவலர் யாரும் இங்கு இல்லை என பணியில் இருந்த போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காதல் ஜோடி நகைகளை பறித்து சென்ற போலி போலீஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காதல் ஜோடியிடம் நகைகளைப் பறித்து சென்ற போலி போலீஸை தேடிவருகின்றனர். காதல் ஜோடியிடம் போலீஸ் என கூறி‌ நகைபறித்து சென்ற சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in