மகளைக் காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை... தடுக்க வந்த தம்பியையும் குத்திக் கொன்றார்!

மகளைக் காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை... தடுக்க வந்த தம்பியையும் குத்திக் கொன்றார்!

காதல் பிரச்சினையில் அண்ணன், தம்பியை பெண்ணின் தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெல்காமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சவுடத்தி தாலுகாவில் உள்ள பெல்காம் மாவட்டம் கரிமணி கிராமத்தைச் சேர்ந்தவர் யல்லப்பா ஹலேகொடி(22). இவரது சகோதரர் மாயப்பா ஹலேகொடி(20). இந்த நிலையில், துண்டனகோப்பாக கிராமத்தைச் சேர்ந்த ஃபக்கீரப்பாவின் மகளை யல்லப்பா காதலித்து வந்தார். இதற்கு ஃபக்கீரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தனது காதலியைத் தேடி அவரது வீட்டிற்கு யல்லப்பா அடிக்கடி சென்று வந்தார்.

இதைப் பார்த்த ஃபக்கீரப்பா, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், இன்று காலை இது தொடர்பாக யல்லப்பா ஹலேகொடிக்கும், ஃபக்கீரப்பாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் யல்லப்பாவை ஃபக்கீரப்பா சரமாரியாக குத்தினார். அப்போது தனது அண்ணனை ஃபக்கீரப்பா கத்தியால் குத்துவதை மாயப்பா ஹலேகொடி தடுத்தார். அப்போது அவரையும் ஃபக்கீரப்பா கத்தியால் குத்தினார். இதில் யல்லப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த மாயப்பாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டைக் கொலை வழக்குப் சம்பந்தமாக முரகோடா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட அண்ணன், தம்பி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தப்பியோடிய ஃபக்கீரப்பாவை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்தை ராமதுர்கா டிஎஸ்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். காதல் விவகாரத்தில் அண்ணன், தம்பி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெல்காம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதிபரபரப்பு...

பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in