தோனியின் தீவிர ரசிகர் மர்ம மரணம்; அதிர்ச்சியில் உறைந்த கடலூர்

தோனியின் தீவிர ரசிகர் கோபி கிருஷ்ணன்
தோனியின் தீவிர ரசிகர் கோபி கிருஷ்ணன்
Updated on
2 min read

கடலூர் அருகே கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், கிஷோர் (10) மற்றும் சக்திதரன் (8) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கோபி, கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ள அவர், வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை வந்து பார்த்து செல்வது வழக்கம்.

தோனியின் தீவிர ரசிகர் கோபி கிருஷ்ணன்
தோனியின் தீவிர ரசிகர் கோபி கிருஷ்ணன்

இந்நிலையில் இன்று காலை கோபி கிருஷ்ணன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் கோபிக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது.

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மேலும், நேற்று இரவு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, கோபிக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அருகில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டில் கோபி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in