பள்ளி, மருத்துவமனைகள் வரிசையில் திகார் சிறைக்கும் வெடிகுண்டு மிரட்டல்... தலைநகரைத் துரத்தும் தலைவலி

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளைத் தொடர்ந்து திகார் சிறைக்கும் இமெயில் வாயிலான வெடிகுண்டு அச்சுறுத்தல் இன்று வந்துள்ளது.

டெல்லியின் பல மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இன்றைய தினம் திகார் சிறைக்கும் மின்னஞ்சல் மூலம் இதேபோன்ற மிரட்டல் வந்தது. இது காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து சோதனை
பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து சோதனை

இந்த அச்சுறுத்தல் தேசிய தலைநகரின் பாதுகாப்பு வளையத்தை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை சீண்டியுள்ளது. இந்த மின்னஞ்சல் மிரட்டல் வெளியானது குறித்து காவல் துறையினரும், மோப்பநாய் படையினரும் சிறை வளாகத்துக்குச் சென்று ஆய்வைத் தொடங்கினர். சிறையில் பல அரசியல்வாதிகள் உட்பட, உயரடுக்கு பாதுகாப்புக்கு உரிய ஏராளமானோர் கைதிகளாக உள்ளதால், சிறை வளாகம் ஏற்கனவே தீவிர கண்காணிப்பில் உள்ளது.

முன்னதாக, டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அங்குள்ள மருத்துவமனைகளில் தீப் சந்த் பந்து மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை உள்ளிட்டவை வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளாயின. இதனை காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்தன.

அந்த மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம், டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள 20 மருத்துவமனைகள், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி - என்சிஆரில் உள்ள 150 பள்ளிகளுக்கும் இதுபோன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்தது.

வெடிகுண்டு அகற்றும் படையினர்
வெடிகுண்டு அகற்றும் படையினர்

ரஷ்யாவை தளமாகக் கொண்ட மின்னஞ்சல் சேவையிலிருந்து, பள்ளிகளுக்கு அச்சுறுத்தல்கள் வந்தாலும், மருத்துவமனைகளுக்கான அச்சுறுத்தல்கள் மின்னஞ்சல் சேவை நிறுவனமான beeble.com என்பதிலிருந்து பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போன்று பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள 4 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன.

முந்தைய வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும், ஆய்வுக்குப் பின்னர் அவை புரளி வகையில் சுருண்டாலும், தேசத்தின் தலைநகர் பாதுகாப்பில் அத்தனை சுலபமாக சமசரம் கொள்ள இயலாது. அதிலும் தற்போது மக்களவைத் தேர்தலின் மத்தியில் தேசம் இருப்பதால், அதனை சீர்குலைக்க முயலும் பயங்கரவாத சக்திகளுக்கு எந்த வகையிலும் இடம்கொடுக்கக் கூடாது என்பதில் டெல்லி காவல்துறை முடிவாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in