கோடநாடு வழக்கு... பங்களாவை ஆய்வு செய்ய சிபிசிஐடி-க்கு நிபந்தனையுடன் அனுமதி!

கோடநாடு பங்களா  நுழைவு வாயில்...
கோடநாடு பங்களா நுழைவு வாயில்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்ய உதகை செசன்ஸ் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. கோடைக் காலங்களில் இந்த பங்களாவில் இருந்தவாறே ஆட்சி மற்றும் அரசியல் பணிகளை கவனிப்பார். ஜெயலலிதா இறந்த பின்னர் இந்த பங்களா பூட்டிவைக்கப் பட்டுள்ளது. இங்கு காவலாளியும்  சில ஊழியர்களும் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2017  ஏப்ரல் 23-ம் தேதி கோடநாடு  பங்களாவில் புகுந்த ஒரு கும்பல் காவலாளி ஓம் பகதூரை கொலைசெய்துவிட்டு,  அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது.  சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் இணைந்து இதில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், இது குறித்த போலீஸ் விசாரணையின் தொடக்கத்திலேயே  கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.  வழக்கு தற்போது நீலகிரி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் வாளையாா் மனோஜ் மட்டும் ஆஜரானார். அப்போது குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரான விஜயன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதாவது சம்பவம் நடந்த இடத்தை தாங்கள் பார்வையிட வேண்டும் எனக் கூறி அதற்கு அனுமதி கேட்டிருந்தார்.

கோடநாடு பங்களா
கோடநாடு பங்களா

இதையடுத்து இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட அனுமதி கோரிய மனுவுக்குப் பதில் அளிக்க அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதி சம்மதித்தார்.


மேலும், தமிழக அரசு சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கின் விசாரணை அதிகாரிகள் கோடநாடு கொலை, கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதி தர வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, சிபிசிஐடி போலீஸ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் கொண்ட குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி அளித்தார்.


தடயங்களை அழிக்கக்கூடாது, மாற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன் சோதனை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், கோடநாடு பங்களாவில் நடத்தப்படும் சோதனையை முழுமையாக வீடியோ எடுத்து சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அரசியல் மாநாடு... விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

நெகிழ்ச்சி... தாயின் கல்லறை முன் மனைவிக்கு தாலி கட்டிய மகன்!

திருவிழாவில் பயங்கரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை!

மெக் டொனால்ட்ஸ் உணவகத்தின் உரிமம் அதிரடியாக ரத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in