காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு: 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கு
காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கில் 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலீஸார், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி இறந்து கிடந்தார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை

இந்நிலையில் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின்பேரில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதத்தில் 30-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாக போலீஸார் தரப்பில் தகவல்கள் வெளியாகின.

இவர்கள் அனைவருக்கும் சிபிசிஐடி போலீஸார், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடையே முதல்கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீஸார் முடித்திருக்கின்றனர். சிபிசிஐடி போலீஸார் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு குழு சிபிசிஐடி அலுவலகத்திலும், மற்றொரு குழு திசையன்விளை பகுதியிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in