சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள பத்ரா ஆற்றில் பலியிடப்பட்ட கருப்பு நிற ஆடுகளின் உடல்கள் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நதிக்கரையில் சூனியம் உள்ளிட்ட மாந்தீரிக வேலை நடந்துள்ளதால் அப்பகுதி பீதியடைந்துள்ளனர்.
கர்நாடகா மாவட்டம், சிக்கமகளூருவின் கலசா தாலுகாவில் பத்ரா நதி உள்ளது. இன்று காலை இந்த நதி ஓடும் ஹெப்பலே பாலம் அருகே கருப்பு நிற ஆடுகளின் உடல்கள் மிதப்பதை பொதுமக்கள் கண்டனர். இதையறிந்த அப்பகுதிகள் அங்கு திரண்டனர். ஆற்றங்கரையோரம் சூனியம் செய்யப்பயன்படும் பொருட்கள் இருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முடி, நகங்கள், களிமண் பொம்மைகள், ரத்தம், எலுமிச்சை பழங்கள், குங்குமப்பூ போன்ற பொருட்கள் அங்கு வைத்து நள்ளிரவு பூஜை நடந்ததற்காக அறிகுறிகள் இருந்தன. அத்துடன் கருப்பு நிற 8 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டு அவற்றின் உடல்கள் ஆற்றில் விடப்பட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த கலசா போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளின் உடல்களை ஆற்றில் இருந்து அகற்றினர். அந்தப் பகுதியில் சூனியம் உள்ளிட்ட மாந்தீரிக வேலையில் ஈடுபட்ட மந்திரவாதி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கலசா - ஹொரநாடு வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பிரதான வீதியின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!
இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!
8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!
நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!