பகீர் சம்பவம்... ஸ்கூட்டரில் சென்ற கலெக்‌ஷன் ஏஜென்டிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி!

குற்ற சம்பவம்
குற்ற சம்பவம்

டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் பணம் வசூலிக்கும் கலெக்‌ஷன் ஏஜென்டிடம் ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ்

டெல்லி நேதாஜி சுபாஷ் பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அதிபரிடம் கலெக்‌ஷன் ஏஜென்டாக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவர் நேற்று மஹாராணா பிரதாப் பாக், சந்தானி சவுக் ஆகிய பகுதிகளில் வழக்கம்போல், வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டார். இரவு 9 மணியளவில் ரூ.50 லட்சம் ரொக்கத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வடக்கு டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் மொனெஸ்டரி மார்க்கெட் அருகே ராஜேஷ் ஸ்கூட்டரில் வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர், மற்றொரு ஸ்கூட்டியில் பின் தொடர்ந்து வந்து வழிமறித்தனர். பின்னர், அவர் வைத்திருந்த ரூ. 50 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இதனால் அதிர்ந்து போன அவர், உடனே சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறுகையில், “ராஜேஷுக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான ஒருவர் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in