அதிர்ச்சி... காவல் ஆணையர் அலுவலகம் அருகில் இருந்த பேருந்து நிழற்குடை திருட்டு!

பேருந்து நிழற்குடை திருடப்பட்ட இடம்.
பேருந்து நிழற்குடை திருடப்பட்ட இடம்.

பெங்களூருவில் காவல் துறை ஆணையர் அலுவலகம் அருகே இருந்த பேருந்து நிழற்குடை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து நிழற்குடை
பேருந்து நிழற்குடை

கர்நாடகா மாநிலம், பெங்களூரு முழுவதும் உள்ள பழைய பேருந்து நிழற்குடைகளை அகற்றி விட்டு புதிய நிழற்குடைகளை அமைக்க ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே(பிபிஎம்பி) தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியுள்ளது.

இதன்படி பெங்களூரு காவல் துறை ஆணையர் அலுவலகம் அருகே கன்னிங்காம் பேருந்து நிறுத்தத்தில் 10 லட்சம் மதிப்புள்ள துருபிடிக்காத நிழற்குடை ஆக.21-ம் தேதி அமைக்கப்பட்டது.

பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணிகள் பானஸ்வாடி, லினகராஜபுரம் மற்றும் யெலஹங்கா போன்ற பல்வேறு இடங்களுக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், நிழற்குடை அமைத்த தனியார் நிறுவனத்தினர் ஆக.28-ம் தேதி சென்று பார்த்தது. அப்போது கன்னிங்காம் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிழற்குடை காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், பிபிஎம்பி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, நிழற்குடை அகற்றப்பட்டதா என்று கேட்டனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு போலீஸார்.
பெங்களூரு போலீஸார்.

இதையடுத்து மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, தனியார் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.ரவி ரெட்டி, ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். குற்றம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிழற்குடையைத் திருடிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.

காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருந்த பேருந்து நிழற்குடை திருடு போன சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in