ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: ரவுடிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

ரவுடி கருக்கா வினோத்
ரவுடி கருக்கா வினோத்
Updated on
1 min read

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது கடந்த 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவரை கிண்டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று முன்தினம் கிண்டி போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தை இன்று காலை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்ற 9வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர்.

ரவுடி கருக்கா வினோத்
ரவுடி கருக்கா வினோத்

அப்போது, நீதிபதி சந்தோஷ், போலீஸார் கோரிக்கையை ஏற்று கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இதையடுத்து கிண்டி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் கருக்கா வினோத்திடம் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்தும், யாருடைய துண்டுதலின் பேரில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டார், அவரது பின்னணி குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in