'ஜெய்பீம்' படத்தின் நிஜ சம்பவத்தில் பாதித்தோருக்கு இழப்பீடு... அரசுக்கு நீதிமன்றம் புது உத்தரவு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

’ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல் துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜகண்ணுவின் மனைவி பார்வதி தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் காவல் துறையினர் சிலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அதேபோல, பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இடைக்கால இழப்பீடாக ராஜகண்ணு மனைவிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆச்சியின் மகன் குள்ளனுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்பட ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

'ஜெய்பீம்’
'ஜெய்பீம்’

அந்த மனுவில், 'தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை மற்றும் நிவாரணங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்தும் நிலைபாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ராஜகண்ணு மரணத்துக்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி 1993-ல் நடத்திய சட்டப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தான், நடிகர் சூர்யா நடிப்பில் ’ஜெய்பீம்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in