தேர்தல் பணி முடித்து, திரும்பியபோது பேருந்து கவிழ்ந்து விபத்து; போலீஸார், ஊர்க்காவல் படையினர் 21 பேர் காயம்!

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு சென்று திரும்பியபோது பேருந்து கவிழ்ந்ததில் காவல்துறை, ஊர்க்காவல் படையினர் 21 பேர் காயமடைந்தனர்.

மக்களவைக்கு முதல் கட்டத் தேர்தல் நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தில் சிந்த்வாரா மக்களவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நேற்று சென்றனர். தேர்தல் பணி முடிந்ததும் அவர்கள் சொந்த மாவட்டமான ராஜ்கருக்கு தனி பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் பணியில் போலீஸார் (கோப்பு படம்)
தேர்தல் பணியில் போலீஸார் (கோப்பு படம்)

இந்த பேருந்து போபால் - பேதுல் நெடுஞ்சாலையில் பரேதா காட் அருகே இன்று அதிகாலை 4 மணிக்கு வந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல் துறை துணைப் பிரிவு அதிகாரி (எஸ்டிஓபி) ஷாலினி பராஸ்தே கூறுகையில், “விபத்துக்குள்ளான பேருந்தில் 5 போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட மொத்தம் 40 பேர் பயணித்தனர். சிந்த்வாராவில் தேர்தல் பணி முடித்துவிட்டு ராஜ்கருக்குச் சென்று கொண்டிருந்தபோது பேருந்து விபத்துக்குள்ளானது.

இதில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த 8 பேர் பெதுலில் உள்ள மாவட்ட மருத்துவமனையிலும், லேசான காயமடைந்தவர்கள் ஷாபூர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் திடீரென குறுக்கே வந்த டிரக் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in