கழுத்தை நெறித்த கடன் சுமை... மகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை

ஜெகநாதன் லோகேஸ்வரி காவியா
ஜெகநாதன் லோகேஸ்வரி காவியா

சென்னையில் கடன் சுமையால் மகளை கொலை செய்து விட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி அடுத்த பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் மணலியில் காதி கிராஃப்ட் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). மகள் காவியா(12) எம்.கே.பி நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை ஜெகநாதனுக்கு அவரது தாயார் போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு உள்புறமாக பூட்டி இருந்த நிலையில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது மகனும், மருமகளும் தூக்கிட்ட நிலையிலும், பேத்தி மெத்தையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கடன்
கடன்

உடனே அவர் இது தொடர்பாக மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த ஜெகநாதனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததும், கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியில் 40 லட்சத்துக்கு வீடு வாங்கியதும், அந்த கடனை அடைக்க முடியாமல் 2023-இல் அந்த வீட்டை விற்றதும் தெரியவந்தது .

ஜெகநாதன்
ஜெகநாதன்

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ஜெகநாதன் இன்று தனது மகள் காவியாவை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு, பின்னர் ஜெகநாதனும் அவரது மனைவி லோகேஸ்வரியும் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in