பயங்கரம்... அக்காவை துரத்தி துரத்தி சுத்தியலால் அடித்துக் கொலை செய்த தம்பி கைது!

 கொலை செய்யப்பட்ட மூதாட்டி நரசம்மா
கொலை செய்யப்பட்ட மூதாட்டி நரசம்மா

கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர், தனது சகோதரியை ஓட ஓட விரட்டி சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டம் பொம்மரலதொட்டியைச் சேர்ந்தவர் நரசம்மா(65). இவரது சகோதர் சுகுரப்பா. மனநலம் பாதிக்கப்பட்ட சுகுரப்பாவை அவரது சகோதரி நரசம்மா கவனித்து வந்தார். இதற்காக வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுகுரப்பா கவனித்துக் கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை சுகுரப்பா கை, கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை வீட்டில் இருந்த சுத்தியால் அடித்து உடைத்தார். அப்போது இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி நரசம்மாவை இரும்பு சுத்தியலால் தாக்கினார். இதனால் நரசம்மா, அவரிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

ஆனால், விடாமல் அவரை தெருவில் துரத்திச் சென்ற சுகுரப்பா, நடுரோட்டில் வைத்து தலையில் சுத்தியலால் சரமாரியாக தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டிலேயே நரசம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சைதாப்பூர் போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட சுகுரப்பா, அவரது சகோதரி நரசம்மாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட நரசம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து சுகுரப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் மூதாட்டியை சுத்தியலால் அவரது சகோதரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in