பரபரப்பு... ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கொலை?: அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

மஞ்சுநாத்
மஞ்சுநாத்

ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் உடல், அழுகிய நிலையில் பூங்காவில் இன்று மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹாசன் மாவட்டம்
ஹாசன் மாவட்டம்

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் அரசிகெரே நகர் லட்சிபர் பேரங்காடியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(70). இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர் கடந்த மார்ச் 27-ம் தேதி வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் மஞ்சுநாத்தை தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மார்ச் 28-ம் தேதி மஞ்சுநாத் காணாமல் போனதாக அரசிகெரே காவல் நிலையத்தில், அவரது மனைவி சரோஜா புகார் செய்தார். இதையடுத்து போலீஸார், வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மஞ்சுநாத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கண்டேனஹள்ளி ஏரியை அடுத்துள்ள பூங்காவில் இன்று காலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது மஞ்சுநாத்தின் சடலம் அழுகிய நிலையில் புதரில் கிடந்தது. இதையடுத்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுநாத் உடலைக் கைப்பற்றினர். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மஞ்சுநாத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மஞ்சுநாத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும். இது தொடர்பாக அரசிகெரே கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in