பீகாரில் சோகம்... வாக்குச் சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணம்!

பீகார் வாக்குச் சாவடி
பீகார் வாக்குச் சாவடி

பீகார் மாநிலம், சுபால் நகரில் தேர்தல் பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்தியாவில் 3-வது கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதும் 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம், சுபால் நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி அலுவலரான சைலேந்திர குமார் என்பவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏஎன்ஐ செய்தியாளரிடம் கூறுகையில், “சைலேந்திர குமார் காலையிலேயே இறந்துவிட்டார். அவர் பணியமர்த்தப்பட்ட இடத்தில் இது நடந்தது.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டபோதே அவரது உயிர் பிரிந்துவிட்டிருந்தது. தற்போது பிரேத பரிசோதனைக்காக சதார் மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சைலேந்திர குமாருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது” என்றார்.

சுபால் மக்களவைத் தொகுதி சோசலிஸ்ட் தலைவர்களின் கோட்டையாகும். இத்தொகுதியில் இந்த முறை பாஜக – ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி சார்பில் ஜேடியு கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய எம்பி-யுமான திலேஷ்வர் கமிட் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

இவரை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சார்பில் சந்த்ரஹாஸ் சவுபால் போட்டியிடுகிறார். இவர் சிங்கேஷ்வர் (தனி) தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆவார்.

ஆர்ஜேடி கடந்த 1998 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த தேர்தலில் தான் இங்கு நேரடியாக தங்கள் கட்சி வேட்பாளரை மீண்டும் களமிறக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in