கடனில் இருந்து விடுபட ஒரு கிட்னியை விற்க முன்வந்த ஆடிட்டர்... மேலும் ரூ.6 லட்சத்தை இழந்த அவலம்

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

கடன் தொல்லையால் தவித்து வந்த பெங்களூரு ஆடிட்டர் ஒருவர், தனது கிட்னி ஒன்றை விற்று கடன் பிரச்சினையில் இருந்து விடுபட முயன்றதில் ரூ6.2 லட்சத்தை இழந்து, மேலும் கடனாளி ஆகியிருக்கிறார்.

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெங்களூரு ஆடிட்டர் ஒருவர், அந்த கடன்கள் மொத்தத்தையும் பைசல் செய்ய உபாயம் தேடி வந்தார். கார் வாங்கியதற்கான நீண்ட கால தவணைகளை அடைக்காதது, கிரெடிட் கார்டுகளின் கடன்களில் வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டது என ஆடிட்டர் கடல்போல கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

அப்போது கிட்னியை விற்பதன் மூலம் பெருந்தொகையை பெற்று கடனை அடைத்துவிடலாம் என்ற யோசனையை செயல்படுத்த முடிவு செய்தார். இணையத்தில் துழாவியதில் தட்டுப்பட்ட www.kidneysuperspecialist.org என்ற இணையதளம் இந்த யோசனையை அவருக்குள் விதைத்தது. (இந்த மோசடி இணையதளம் இப்போது செயல்படவில்லை). அந்த தளத்திலிருந்த 9631688773 என்ற தொடர்பு எண்ணை ஆடிட்டர் தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் இருந்தவர்கள், பெயர், வயது, இரத்தப்பிரிவு உள்ளிட்டவற்றை அனுப்புமாறு கேட்டனர். கிட்னி என்ன விலைபோகும் என்று பரிதவிப்புடன் காத்திருந்த ஆடிட்டருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ’ஏபி’ ரத்த பிரிவு சிறுநீரகத்துக்கு கோடீஸ்வரர் ஒருவர் தயாராக இருப்பதாகவும், ரூ2 கோடி விலைபேசலாம் என்றும் மறுமுனையில் ஆசை வார்த்தை தூவினார்கள். மேலும் ரூ1 கோடியை முன்பணமாக பெறலாம் என்றும் பேராசை காட்டினார்கள்.

ஆடிட்டர் ஆடிப்போனார். அடுத்து ஒரு சில ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் வரி பிடித்தங்கள், கட்டணங்கள் என்ற பெயரில் சிறிதும் பெரிதுமாக ஆடிட்டரிடமிருந்து பணத்தை கறக்க ஆரம்பித்தனர். ரூ2 கோடி கனவிலிருந்த ஆடிட்டர் ஒரு சில லட்சங்களை கட்டணமாக செலுத்த முன்வந்தார். புதிதாய் கடன்வாங்கி அவற்றை ஆன்லைனில் அனுப்பி வைத்தார். இப்படியே ரூ6.2 லட்சம் வரை இழந்த பின்னரே ஒரு கட்டத்தில் அவர் தாமதமாக சுதாரித்தார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

ஒரு ஆடிட்டராக பொறுமையாக யோசித்தார். தன் வசம் இ மெயிலில் அனுப்பப்பட்ட ஆவணங்களை சரிபார்த்தார். அப்போதுதான் தான் பட்டவர்த்தனமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பெங்களூரு சைபர் பொருளாதாரப் பிரிவு போலீஸாரை அணுகி நடந்ததை விவரித்தார். அவர்கள் வழக்கு பதிவு செய்து, ஆடிட்டரிடம் மோசடி செய்த வங்கிக்கணக்குகளை முடக்கி, விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக கிட்னியை விற்க முயன்றதில் ஆடிட்டர் மீதும் சட்டம் பாய உள்ளது. எனவே அதுவரை ஆடிட்டர் குறித்த தனிப்பட்ட விவரங்களை போலீஸார் ரகசியமாக வைத்துள்ளனர். கடனில் இருந்து தப்பிக்க கிட்னியை விற்க முயன்ற ஆடிட்டர், முன்னைவிட அதிகமான கடனில் விழுந்ததில் உடைந்து போயிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

பாஜக அமைச்சரவை திடீர் ராஜினாமா... ஹரியாணாவில் பரபரப்பு!

ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!

சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்... மோடி காமராஜர் போல் ஆட்சி நடத்துவதாக புகழாரம்!

1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in