பட்டியலின இளைஞர்களுக்கு மொட்டை போட்டு வன்கொடுமை... 28 ஆண்டுகளுக்குப் பின் ஒய்எஸ்ஆர் காங்., வேட்பாளருக்கு 18 மாதம் சிறை!

தோட்ட திரிமுர்த்துலு
தோட்ட திரிமுர்த்துலு

பட்டியலின இளைஞர்களுக்கு மொட்டை போட்டு, வன்கொடுமை செய்த வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் கோனசீமா மாவட்டத்தின் ராமச்சந்திரபுரம் பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு, 5 பட்டியலின இளைஞர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இளம் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதோடு அவர்கள் குறித்த ஆபாசமாக சுவற்றில் எழுதி வைத்திருந்ததாக இந்த ஐந்து இளைஞர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் 87 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.

1996ம் ஆண்டு வன்கொடுமைக்கு ஆளான பட்டியலின இளைஞர்கள்
1996ம் ஆண்டு வன்கொடுமைக்கு ஆளான பட்டியலின இளைஞர்கள்

குற்றம்சாட்டப்பட்ட ஐவரில், இருவரின் தலை மொட்டையடிக்கப்பட்டதோடு, அவர்களது கண் புருவங்களும் பிடுங்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், அப்போது ராமச்சந்திரபுரம் தொகுதியில் சுயேட்சை எம்எல்ஏ-வாக இருந்த தோட்ட திருமுர்த்துலு உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஷிரிமுண்டனம் வழக்கு என்றழைக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் திரிமுர்த்துலுவுக்கு இந்த வழக்கில் சம்பந்தமில்லை என அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தோட்ட திரிமுர்த்துலு
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தோட்ட திரிமுர்த்துலு

இதைத் தொடர்ந்து, தலித் அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் மீண்டும் அவர் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு சுமார் 28 ஆண்டுகளாக வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். 24 சாட்சிகளில் 11 பேர் உயிரிழந்தனர். 6 முறை அரசு வழக்கறிஞர்கள் மாறி உள்ளனர். 148 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி தோட்ட திரிமுர்ததுலு உட்பட 9 பேரையும் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அனைவருக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தற்போது திருமுர்த்துலு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ராமச்சந்திரபுரம் தொகுதியில் இவர் வேட்பாளராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in