சவுக்கு சங்கர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார்... காவல் ஆணையரிடம் வீரலட்சுமி புகார்!

வீரலட்சுமி
வீரலட்சுமி

பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசிய யூடியூபர்கள் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி புகாரளித்துள்ளார்.

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் யூடியூபர்கள் சவுக்கு சங்கர், பீலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, “தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசிய யூடியூபர்கள் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம். பெலிக்ஸை கைது செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்
கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்

எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். ஆனால் சவுக்கு சங்கர் தான் வேலை செய்த லஞ்ச ஒழிப்புத்துறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்,‌ இது யாருக்கும் தெரியாது.

இந்தியாவிலேயே சிறந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அறம், நேர்மையை கடைபிடித்து வரும் ஊடகங்கள் மத்தியில் ரெட்பிக்ஸ் யூடியூபர் பெலிக்ஸ் இது போன்று தவறானதை வெளியிட்டு ஊடகங்களின் நற்பெயரை கெடுத்துள்ளார். தற்போது சவுக்கு சங்கர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

சாதிய வன்மம் கொண்டவர் சவுக்கு சங்கர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார். இந்த பேட்டியை பணம் கொடுத்து ரெட்பிக்ஸில் ஒளிபரப்ப சொன்னது யார்? இவர்களின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது. சவுக்கு சங்கர் கருத்து சொல்லவில்லை, அவதூறாக பேசி உள்ளார். வானதி சீனிவாசனுக்கு பேசதெரியவில்லை, பாஜகவில் சீட் கிடைக்க வானதி சீனிவாசன் அஜெஸ்ட் பண்ணி தான் வாங்கினார் என்று நான் சொன்னால் ஏற்று கொள்வார்களா?. எனவே பாஜக சவுக்கு சங்கருக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது.

வீரலட்சுமி
வீரலட்சுமி

பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் கொடுத்த பேட்டியில், அவர் அரை போதையில் பேசியது தெளிவாக தெரிகிறது. திமுக தூண்டுதலின் பேரில் நான் சவுக்கு சங்கர் மீது புகாரை கொடுக்கவில்லை, நான் திமுகவுக்கு ஆதரவு இல்லை.

சவுக்கு சங்கரை தூண்டியது பெலிக்ஸ் தான். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது சரியில்லை, ஜெயக்குமாரும் பெண்களுக்கு எதிரானவர் தான்” என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in