வேறு பெண்ணுடன் பழகியதால் ஆத்திரம்... பெட்ரோலை ஊற்றி காதலனை எரித்துக் கொன்ற இளம்பெண்!

ஆகாஷ் - சிந்துஜா
ஆகாஷ் - சிந்துஜா

வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி, பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தனது காதலனை கொலை செய்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த ஆகாஷ் (24), பூம்புகார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்தவர் சிந்துஜா (22), மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியது தொடர்பாக சிந்துஜாவுக்கும், அவருக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி ஆகாஷ், சிந்துஜா இருவரும் பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.

பெட்ரோல் கேன்
பெட்ரோல் கேன் HR Ferncrystal

அப்போது, "வேறு எந்த பெண்ணிடம் தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது" என்று, சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. இருவரும் மயிலாடுதுறை பாலக்கரை விஜித்ராயர் அக்ரஹாரம் சாலை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது தன்னைக் காதலிக்க மறுத்ததால் மனம் உடைந்த சிந்துஜா மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.

அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்துள்ளது. இதனால் பலத்த தீக்காயங்களுடன் கீழே விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆகாஷ் 60 சதவீதமும், சிந்துஜா 40 சதவீதமும் தீக்காயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் ஆகாஷ் - சிந்துஜா
மருத்துவமனையில் ஆகாஷ் - சிந்துஜாHR Ferncrystal

இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றதை அடுத்து ஆகாஷ் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கடந்த 5 நாட்களாக இருவரும் தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த மாணவியும் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். சிந்துஜா மீது மயிலாடுதுறை போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரது காதலன் ஆகாஷ் இறந்ததை அடுத்து கொலை வழக்காக போலீஸார் மாற்றம் செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in