தலையில் கல்லைப்போட்டு சாலையில் உறங்கியவர் கொலை... பெங்களூருவில் பயங்கரம்!

கொலை நடந்த இடம்.
கொலை நடந்த இடம்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சாலையோரம் படுத்திருந்தவரை கல்லைப்போட்டு கொலை செய்தவரை பெங்களூருவில் போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஜெயநகர் 7வது தெருவில் இன்று காலை ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், பனசங்கரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக பனசங்கரி போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவு சாலையோரம் ஒருவர் படுத்திருந்தார். அப்போது குடிபோதையில் வந்தவர், படுத்திருந்தவர் மீது விழுந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

பனசங்கரி காவல் நிலையம்
பனசங்கரி காவல் நிலையம்

இந்த பிரச்சினை முடிந்த சில மணி நேரங்களில், சாலையோரம் படுத்திருந்தவர் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்தவர், அங்கு வந்துள்ளார். உறங்கிக் கொண்டிருந்தவரின் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது விசாரணையில் தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்டவர் யார், கொலை செய்தவர் என்பது குறித்து பனசங்கரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in