ஷாக்.. 14 வயது சிறுமியை கடத்தி ஓடும் பேருந்தில் பலாத்காரம்: ராஜஸ்தானில் பயங்கரம்!

ஷாக்.. 14 வயது சிறுமியை கடத்தி ஓடும் பேருந்தில் பலாத்காரம்: ராஜஸ்தானில் பயங்கரம்!

8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மற்றும் ஜெய்சல்மேர் இடையே ஸ்லீப்பர் பேருந்தில் 14 வயதுடைய 8-ம் வகுப்பு சிறுமி பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ரத்தன் நகரில் உள்ள தாதாரியா கிராமம் தரம்ஷாலாவைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த அனில் மேக்வால்(21) என்ற வாலிபர் ஒன்றரை ஆண்டுகளாக போதைப்பொருள் ஜூஸ் ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் அந்தரங்கப் புகைப்படங்களை அனில் மேக்வால் எடுத்துள்ளார்.

அந்த ஆபாசப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவதாகக் கூறி கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். அப்போது ஓடும் பேருந்தில் அந்த சிறுமியை அனில் மேக்வால், இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரத்தன்நகர் காவல் நிலைய அதிகாரி ஜெய்பிரகாஷ் கூறுகையில், எட்டாம் வகுப்பு மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். தாதரியா பனிரோடன் கிராமத்தைச் சேர்ந்த அனில் மேக்வால் என்ற இளைஞர் சர்தார்ஷஹரில் இருந்து ஜெய்சால்மருக்கு செல்லும் ஸ்லீப்பர் பேருந்தில் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

அத்துடன் ஓடும் பேருந்திலேயே இரண்டு முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் புகாரின் அடிப்படையில் அனில் மேக்வால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், அனில் மேக்வால் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். சிறுமிக்கு 12 வயதாக இருக்கும் போதே அவரை அனில் மேக்வால் பாலியல் பலாத்காரம் செய்ததும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தாதாரியா கிராமத்தில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in