10-ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து மதமாற்றம்: பெண் ஆசிரியை உள்பட 4 பேர் மீது வழக்கு!

பலாத்காரம்
பலாத்காரம்

10-ம் வகுப்பு மாணவனைப் பாலியல் பலாத்காரம் செய்து கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக பெண் ஆசிரியை உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவனை பெண் ஆசிரியை பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், பின்னர் தனது மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் அவனது பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.

அத்துடன், இவ்விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெண் ஆசிரியை மீது கன்டோமென்ட் பகுதி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

போக்சோ
போக்சோ

இதனால் அதிருப்தியடைந்த மாணவனின் பெற்றோர், சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகினர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் நவ.7-ம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பெண் ஆசிரியை, அவரது கணவர், அவரது சகோதரர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆகியோர் மீது நவ.16-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் சட்டவிரோதமாக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in