பரபரப்பு... சிறைக்கைதிகள் 63 பேருக்கு எய்ட்ஸ்!

லக்னோ மாவட்ட சிறை
லக்னோ மாவட்ட சிறை
Updated on
2 min read

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறையில் கைதிகள் 63 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மாவட்டச் சிறையில் கடந்த 2023 டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் சிறையில் உள்ள  சுமார் 36 கைதிகளுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பே அங்கு 27 பேருக்கு எய்ட்ஸ் இருந்த நிலையில்,  தற்போது 36 பேருக்கு எய்ட்ஸ் கண்டறியப்பட்டிருப்பதால் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 63 ஆக உயர்ந்து உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள், "இப்போது எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்ட கைதிகளில் பெரும்பாலானோர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்களுக்கு சிறைக்கு வெளியே எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். அவர்கள் போதைப் பொருள் எடுத்துக் கொண்டபோது ஏற்கெனவே பாதிப்பு உள்ளவர்கள் ஊசியை இவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். அதுவே எய்ட்ஸ் பாதிப்பிற்குக் காரணமாகும். சிறைக்கு வந்த பிறகு எந்த கைதிக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை" என்கிறார்கள்.

லக்னோ சிறை
லக்னோ சிறை

எய்ட்ஸ் நோய் பாதித்த கைதிகள் அனைவரும் தற்போது லக்னோவில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.  கைதிகளையும் அவர்களின் உடல்நிலையையும் சிறை நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எச்ஐவி தொற்று காரணமாக எந்த உயிரிழப்பும்  ஏற்படவில்லை என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்னதான் சிறை நிர்வாகம் தரப்பில் விளக்கங்கள் வந்தாலும் கூட இத்தனை பேருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது லக்னோ மாவட்ட சிறையில் உள்ள சுகாதார சூழல் குறித்த கேள்விகளை மக்களிடையே எழுப்பியுள்ளது. அவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் பாதிப்பு வந்திருக்கும் என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கும் இந்த எய்ட்ஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in