சேர்ந்து வாழ மறுத்த 20 வயது வாலிபர்... கூலிப்படையை ஏவிய 40 வயது பெண்ணால் பரபரப்பு!

ராதா, வெங்கடேஷ்
ராதா, வெங்கடேஷ்

தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த 20 வயது இளைஞன் தன்னை விட்டு பிரிந்ததால் அவரை கூலிப்படை வைத்து தீர்த்து கட்ட முயற்சித்த 40 வயது பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (20). மினரல் வாட்டர் கம்பெனி ஊழியர். இவர் குண்டூரில் தண்ணீர் கேன்  விநியோகித்து வருகிறார். அப்படி வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும்போது ராமிரெட்டிதோட்டா பகுதியைச் சேர்ந்த ராதா (40) என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  திருமணமான ராதா தனது கணவரைப் பிரிந்து தனியாக வசிக்கிறார். இவரது மகளுக்கு திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் வெங்கடேஷீம், ராதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது ராதா தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க  அதற்கு வெங்கடேஷூம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  வெங்கடேஷ், ராதாவை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

தனது பெற்றோரிடம், ராதா கணவரைப் பிரிந்து கஷ்டப்படுவதால் வேலைதேடி வந்துள்ளார். வேலை கிடைக்கும் வரை வீட்டில் சில மாதங்கள் தங்கிவிட்டு செல்லட்டும்' என கூறியுள்ளார். ஆனால் ராதா, வெங்கடேஷின் நடவடிக்கை அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெங்கடேஷின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. 

அதன்பேரில் கடந்த வாரம் ராதாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருக்கின்றனர்.  தனது பெற்றோருடன் சேர்ந்துகொண்டு வெங்கடேஷூம் ராதாவை வெளியே தள்ளி விரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து குண்டூர் போலீஸில் கடந்த 30-ம்தேதி ராதா புகார் செய்தார். அதன்பேரில் வெங்கடேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வெங்கடேஷை தீர்த்துக்கட்ட ராதா திட்டமிட்டுள்ளார். அதன்படி கூலிப்படையை சேர்ந்த 3 பேருடன் சென்று வெங்கடேஷை இரும்பு ராடால் நேற்று சரமாரியாக தாக்கியுள்ளார். அத்துடன் தான் கொண்டுவந்த ஆசிட்டை வெங்கடேஷ் மீது ராதா வீசியுள்ளார். இதில்  வெங்கடேஷின் முதுகு பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டது. மேலும் இரும்பு ராடால் தாக்கியதிலும் காயம் ஏற்பட்டது. இதனால் கூலிப்படையுடன் ராதா தப்பிச் சென்றார்.

அங்கிருந்தவர்கள் வெங்கடேஷை குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக குண்டூர் போலீஸார் வழக்குப்பதிந்து ராதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 3 வாலிபர்களைத் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in