மகாராஷ்டிரா என்கவுன்டர்... 2 கமாண்டர்கள் உட்பட 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

நக்சலைட்டுகள் (கோப்பு படம்)
நக்சலைட்டுகள் (கோப்பு படம்)

தெலங்கானா மாநிலத்திலிருந்து மகாராஷ்டிரா மாநில எல்லைக்குள் ஊடுருவிய நக்சலைட்டுகள் நால்வர், போலீஸாரின் என்கவுன்டர் நடவடிக்கையில் இன்று கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற என்கவுன்டரில், பல்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட நக்சலைட் அமைப்பின் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களின் தலைக்கு தலா ரூ9 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நக்சல் தேடுதல் வேட்டை
நக்சல் தேடுதல் வேட்டை

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சட்ட விரோத செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு எதிராக நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து மகாராஷ்டிராவின் கட்சிரோலிக்குள் நுழைந்ததாக நேற்று மதியம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் மீது​​நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

நீண்டநேர துப்பாக்கிச் சூடுக்கு பின்னர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அடையாளங்களை சரி பார்த்தபோது அவர்கள், தலைக்கு பரிசுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் என்பதும் தெரிய வந்தது.

நக்சலைட்டுகள்
நக்சலைட்டுகள்

கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் வசமிருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் இயக்கப் பிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த நக்சலைட்டுகளின் பின்னணி தொடர்பாக பின்னர் அடையாளம் காணப்பட்டனர். அதன் அடிப்படையில் இருவேறு நக்சல் குழுக்களின் கமாண்டர்களான வர்கீஸ், மக்து மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் ஆகியோரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்...  50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in