மாட்டிறைச்சி விற்றதாக இரட்டைக் கொலை, கூட்டுப் பலாத்காரம்... 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை தீர்ப்பு

பலாத்காரம்
பலாத்காரம்

மாட்டிறைச்சி விற்றதாக குறிப்பிட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல் தொடுத்த கும்பல் ஒன்று, இரட்டைக்கொலை மற்றும் 2 பெண்களை கூட்டு பலாத்காரம் செய்தது. அந்த குற்றங்களை இழைத்த குற்றவாளிகள் 4 பேருக்கு, ஹரியானா சிபிஐ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம், 2016-ம் ஆண்டின் நூ பகுதியில் நடந்தேறிய கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் இரட்டைக் கொலை வழக்கில், 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஹேமத் சௌஹான், அயன் சவுகான், வினய் மற்றும் ஜெய் பகவான் ஆகிய நால்வரும் இவ்வாறு தூக்கு தண்டனை விதிப்புக்கு ஆளானார்கள்.

 நீதிமன்ற தீர்ப்பு
நீதிமன்ற தீர்ப்பு

ஹரியானாவின் நூ இரட்டைக் கொலை மற்றும் கூட்டு பலாத்காரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் குற்றவாளிகள் என்று ஏப்ரல் 10 அன்று சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது. இந்த குற்றவாளிகளுக்கான தண்டனையாக தூக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு ரூ8.20 லட்சம் அபராதம் விதித்தும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாட்டிறைச்சி விற்றதாகக் குற்றம் சாட்டி, நூ பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் வீட்டிற்குள் 2016, ஆகஸ்ட் 24 இரவில் ஒரு கும்பல் நுழைந்தது. குற்றவாளிகள் நால்வரும் முதலில் வீட்டின் தம்பதியரை அவர்களது வீட்டின் முற்றத்தில் வைத்து அடித்தே கொன்றனர். அதன் பின்னர் அந்த வீட்டில் வசித்த 16 மற்றும் 21 வயதுடைய இரு பெண்களையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஹரியானாவில் அரசியல் புயலைக் கிளப்பியது.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக ஹரியானா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் வழக்கை மாநில அரசிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அரிதிலும் அரிதான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று, வழக்கு விசாரணையின் நிறைவாக, சிபிஐ சார்பில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்படியே இரட்டைக் கொலை மற்றும் 2 பெண்கள் கூட்டு பலாத்காரத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in