பள்ளி வளாகத்தில் அதிர்ச்சி... வெடித்துச் சிதறிய ராட்சத ஹீலியம் பலூன்; 33 குழந்தைகள் காயம்

ஹீலியம் பலூன் வெடித்துச் விபத்து
ஹீலியம் பலூன் வெடித்துச் விபத்து

சத்தீஸ்கரில் ராட்சத ஹீலியம் பலூன் வெடித்துச் சிதறிய விபத்தில், 33 பள்ளி குழந்தைகள் உட்பட 36 பேர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சற்குஜா மாவட்டத்தில், அம்பிகாபூர் நகரில், விவேகானந்தா வித்யா நிகேதன் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மதியம் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நிகழ்ச்சி ஒன்றிற்காக ராட்சத பலூன்களில் ஹீலியம் நிரப்பும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 3 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலூன் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹீலியம் சிலிண்டர்கள் மூலம் காற்று நிரப்பிக்கொண்டு இருந்த 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஹீலியம் பலூன் வெடித்ததில் 33 பள்ளி குழந்தைகள் காயம்
ஹீலியம் பலூன் வெடித்ததில் 33 பள்ளி குழந்தைகள் காயம்

மேலும், மைதானத்தில் அப்போது நின்றிருந்த 33 மாணவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் குந்தன் குமார், பலூன் வெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

பலூன் வெடிப்பு குறித்து போலீஸார் விசாரணை
பலூன் வெடிப்பு குறித்து போலீஸார் விசாரணை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in