
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், யூரி பகுதியில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆபரேஷன் காளி என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் 34 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு, சிறப்பு துணை ராணுப்படையான 9 பாரா, சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு போலீஸார் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் ஊடுருவல் முயற்சி தவிர்க்கப்பட்டு, 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில். போலீஸார் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மேலும் 3 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!
அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!