வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை... அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

பதுங்கியிருந்த 3 அடி நீள முதலை பிடிபட்டது
பதுங்கியிருந்த 3 அடி நீள முதலை பிடிபட்டது

தஞ்சாவூர் அருகே, விவசாயி வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விடுவித்தனர்.

திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இயல்பான வெப்பத்தை விட ஐந்து டிகிரி பாரன்ஹீட் வரையிலும் கூடுதலாக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

தண்ணீர் தேடி முதலை வந்திருக்கலாம் என வனத்துறையினர் தகவல்
தண்ணீர் தேடி முதலை வந்திருக்கலாம் என வனத்துறையினர் தகவல்

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அவர் சந்தேகம் அடைந்துள்ளார். முதலில் பாம்பு என்று நினைத்து அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்புறம் தான் அது பாம்பு அல்ல, முதலை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மிரண்டு போன அவர் உடனடியாக வருவாய்த்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதனிடையே குடியிருப்புப் பகுதிக்குள் முதலை புகுந்ததை பார்த்துவிட்டு அப்பகுதி மக்கள், இது ஒன்று தானா அல்லது வேறு முதலைகளும் வந்திருக்குமா என நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை விடுவிப்பு
அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை விடுவிப்பு

உடனடியாக அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீளம் கொண்ட முதலையை கயிறு கட்டி பிடித்தனர். பின்னர் வேன் மூலம் அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விடுவித்தனர். தண்ணீருக்காக இந்த முதலை இரவு முழுவதும் நீண்ட தூரம் பயணித்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in