கோவை: லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 பேர் பலி; உயிருக்குப் போராடும் சிறுவன்

லாரி கார் மோதிய விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்
லாரி கார் மோதிய விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்

கோவையில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மதுக்கரை அருகே உள்ள குமட்டிபதி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவராஜ் (35) என்பவர், தனது உறவினர்களான ஜெயக்குமரேசன் (32), கணேசன் (35), ஹரி (12) ஆகியோருடன் கார் ஒன்றில் வேலந்தாவளத்தில் இருந்து நாச்சிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மாஸ்திகவுண்டன்புதூர் பகுதியில் கார் வந்தபோது, எதிரே ஆந்திராவில் இருந்து சிமென்ட் குழாய்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோட்டம்
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோட்டம்

இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டி வந்த சிவராஜ், ஜெயக்குமரேசன், கணேசன், ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஹரியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காரில் பயணித்த மூவர் பலி - சிறுவன் படுகாயம்
காரில் பயணித்த மூவர் பலி - சிறுவன் படுகாயம்

தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரில் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கே.ஜி.சாவடி போலீஸார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பியோடிய ஓட்டுநரை தேடும் போலீஸ்
தப்பியோடிய ஓட்டுநரை தேடும் போலீஸ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in