சோகம்... ஆற்றில் வலையோடு இறங்கிய 2 இளைஞர்கள்: நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!

உயிரிழந்த பிரசாந்த் பூஜாரி, ஸ்ரீஷா
உயிரிழந்த பிரசாந்த் பூஜாரி, ஸ்ரீஷா

உடுப்பியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுப்பி
உடுப்பி

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம், பிரம்மவார் தாலுகாவில் உள்ள ஹோசலா கிராமம் உள்ளது. இங்கு ஹோசல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீஷா(21), பிரசாந்த் பூஜாரி(30) ஆகியோர் மீன் பிடிப்பவதற்காக நேற்று சென்றனர். நாகரமாதாவில் உள்ள சீதா ஆற்றில் அவர்கள் இருவரும் வலையின் மூலம் மீன் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது ஆற்றில் மீன்களுக்காக வலையை விரிக்கும் போது ஸ்ரீஷா, பிரசாந்த் இருவரும் நீரில் முழ்கினர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து இரண்டு இளைஞர்களையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், தண்ணீரின் அழுத்தம் அதிகம் இருந்ததால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள், நீச்சல் நிபுணர் ஈஸ்வர் மால்பே மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல்களைத் தேடினர். ஆனால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், ஸ்ரீஷா, பிரசாந்த் பூஜாரி ஆகியோரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பிரம்மாவூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in