முகேஷ் அம்பானிக்கு தொடர் கொலை மிரட்டல்... 2 இளைஞர்கள் கைது!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு பல்வேறு கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக குஜராத் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த 2 இளைஞர்களை மும்பை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐந்து மின்னஞ்சல்களை மும்பை காம்தேவி போலீஸார் ஆராய்ந்ததனர். அதன் முடிவில், அந்த மின்னஞ்சல்கள் நிஜமான மிரட்டலுக்காக அனுப்பப்பட்டவை அல்ல என்பதும் எவரோ விஷமத்துடன் இந்த வேலைகளை செய்வதையும் அறிந்தனர்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

அக்.27 அன்று ஷதாப் கான் என்பவர் பெயரில் அனுப்பப்பட்ட முதல் மின்னஞ்சலில், ’முகேஷ் அம்பானி ரூ.20 கோடி தரவில்லை என்றால், சுட்டுக் கொல்லப்படுவார். எங்களிடம் இந்தியாவிலேயே சிறந்த ஷூட்டர்கள் உள்ளனர்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரின் அதிகாரபூர்வ முகவரிக்கு வந்த மின்னஞ்சல், ’முதல் மின்னஞ்சல் பிரகாரம் செயல்படத் தவறியதால், ரூ.200 கோடியாக மிரட்டல் தொகை உயர்த்தப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தார்கள். பிற்பாடு வந்த 3-வது மின்னஞ்சல் அந்த தொகையை ரூ.400 கோடிக்கு உயர்த்தி இருந்தது. அதன் பின்னரான 2 மின்னஞ்சல்கள் குறித்து போலீஸார் தகவல்களை வெளியிடவில்லை.

இமெயில் மிரட்டல்
இமெயில் மிரட்டல்

மின்னஞ்சல்களின் ஐபி முகவரிகளை ஆராய்ந்த போலீஸார், குஜராத்தை சேர்ந்த 25 இளைஞர் ஒருவரை கைது செய்தனர். ஆனால் முகேஷ் அம்பானிக்கான 5 மின்னஞ்சல்களில் 4 மட்டுமே அவர் அனுப்பியிருந்தார்.

மும்பை போலீஸாரின் அடுத்தக்கட்ட விசாரணையாக தெலங்கானா விரைந்து சென்றவர்கள், அங்கே கணேஷ் ரமேஷ் வன்பார்தி என்ற 19 வயது இளைஞரை கைது செய்தனர். இந்த இருவருக்கு அப்பால் இந்த வழக்கில் வேறு எவருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!

நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!

என்னை பலமுறை சாகடிச்சுட்டாங்க... நடிகர் விக்ரம் பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in