
மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பட்சோய் என்ற இடத்தில் நேற்று இரவு இரண்டு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
மேதி மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பட்சோய் என்ற இடத்தில் நேற்று இரவு இரண்டு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
வீடுகளுக்கு தீவைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடுகளுக்கு தீவைத்த நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மீண்டும் வன்முறை பரவாத வகையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்