நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை... புனே நீதிமன்றம் தீர்ப்பு!

சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர்
சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர்

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புனே நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றம் விடுவித்தது.

சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதியின் (மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்பு குழு) தலைவருமானவர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அன்று புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹிந்து வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய இஎன்டி டாக்டர் வீரேந்திரசிங் தவாடே மற்றும் சிலர், தபோல்கரின் மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி மேற்கொண்டு வந்த பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை

தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீஸார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014-ல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது.

இந்த வழக்கில் வீரேந்திரசிங் தவாடேவை கடந்த 2016 ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது. மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், தபோல்கர் கொலை வழக்கில் புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிபி ஜாதவ் இன்று அளித்த தீர்ப்பில், ”சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் மீதான கொலை, சதி குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது.

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என தெரிவித்தார். மேலும், வீரேந்திரசிங் தவாடே, சஞ்சீவ் புனாலேகர், விக்ரம் பாவே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in