மகாராஷ்டிராவில் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு... 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

பாதுகாப்புப்படை என்கவுண்டர்
பாதுகாப்புப்படை என்கவுண்டர்

மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பெரிமிளி தாலம் என்ற பெயரில் நக்சலைட்டுகள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இவர்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இவ்வாறு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு அடுத்து வரும் மாதங்களில் பாதுகாப்பு படையினர் மீது கடுமையான தாக்குதல்களை நக்சலைட்டுகள் நடத்துகின்றனர்.

நக்சலைட்டுகள் (கோப்பு படம்)
நக்சலைட்டுகள் (கோப்பு படம்)

இந்த நிலையில், இன்று மகராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்டரங்கட்டா கிராமத்தின் அருகே நக்சலைட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநில சி-60 கமாண்டோ பிரிவினர் மற்றும் கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திடீரென நக்சலைட்டுகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாதுகாப்புப்படையினர் சோதனை (கோப்பு படம்)
பாதுகாப்புப்படையினர் சோதனை (கோப்பு படம்)

துப்பாக்கிச் சூடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, இரண்டு பெண் நக்சலைட்டுகள் உட்பட 3 பேர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதில் உயிரிழந்தவர், நக்சலைட் அமைப்பின் கமாண்டரான வாசு என்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி, இன்சாஸ் ரக துப்பாக்கி மற்றும் நக்சலைட் அமைப்பு தொடர்பான புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 70-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in