20 நாள்களில் 2 பெண்களுடன் திருமணம்... வசமாக சிக்கிய 19 வயது தில்லாலங்கடி இளைஞர்!

பீகாரில் 2 திருமணம் செய்த இளைஞரிடம் விசாரணை
பீகாரில் 2 திருமணம் செய்த இளைஞரிடம் விசாரணை

பீகாரில் 19 வயது இளைஞர் 20 நாள்களுக்குள் இரண்டு பேரை திருமணம் செய்தது குறித்து முதல் மனைவி போலீஸில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தில் வசிக்கும் பிரதீப் தந்தியின் மகன் வினோத் குமார் (19). இவருக்கு லட்சுமிபூர் காவல் நிலையப் பகுதியின் நவ்கடிஹ் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி குமாரியுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது, இருப்பினும் பிரீத்தி குமாரி வினோத்தை காதலித்து வந்தார். இவர்கள், பிரீத்தியின் முந்தைய திருமணம் பற்றியோ அல்லது குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படவில்லை.

திருமணம்
திருமணம்

இந்நிலையில் வினோத் குமார் பிரீத்தியை சந்திக்கத் திட்டமிட்டார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று பிரீத்தியின் வீட்டிற்கு சென்ற வினோத்குமார் துரதிர்ஷ்டவசமாக கிராம மக்களிடம் பிடிபட்டார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கிராமத்தினர் அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரீத்தியை வினோத்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்து, குடும்பம் நடத்தத் துவங்கினார்.

ஆனால் யாரும் எதிர்பாராத திருப்பமாக வினோத்குமாருக்கு ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. டிஜே-வாக பணிபுரியும் வினோத் குமார், கிரிஜா குமாரி என்ற பெண்ணின் பாடல் பரிந்துரைகளை அடிக்கடி ஒலிபரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வினோத்குமாரிடம் மயங்கிய கிரிஜா குமாரி அவர் மீது காதல் வயப்பட்டார்.

திருமணம்
திருமணம்

ஒருபுறம் பிரீத்தி குமாரியுடன் திருமணமான நிலையில் மற்றொரு புறம் கிரிஜா குமாரியுடனும் வினோத்குமார் தொடர்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கிரிஜாகுமாரி வீட்டிற்கு ரகசியமாக சென்ற வினோத்குமாரை, கிராமத்தினர் பிடித்து ஏற்கெனவே நடந்தது போல், கோயிலில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். இந்த இரு திருமணங்களும் 20 நாட்களுக்குள்ளாக நடந்தது.

இந்நிலையில் வினோத் குமாரின் தில்லாலங்கடி வேலையை அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரீத்திகுமாரி, இது குறித்து மலாய்பூர் காவல் நிலையத்தில் சென்று முறையிட்டார். இதையடுத்து அனைவரையும் போலீஸார் அழைத்து விசாரித்தனர். அப்போது, பிரீத்திகுமாரியுடன் வினோத்குமார் சேர்ந்து வாழ, கிரிஜா குமாரி ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து போலீஸார் அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இதுகுறித்து காவல் துறை அதிகாரி மகேஷ் குமார் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப் பூர்வமான புகார் எதுவும் வரப்பெறவில்லை. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார். பீகாரில் 19 வயது இளைஞர் 20 நாள்களுக்குள் 2 திருமணம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in