சோகம்... பணியிட மாற்றம் கிடைக்காத விரக்தி... 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை!

108 ஆம்புலன்ஸ் (பைல் படம்)
108 ஆம்புலன்ஸ் (பைல் படம்)

சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கு மாறுதல் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனிசெட்டிபட்டி காவல் நிலையம்
பழனிசெட்டிபட்டி காவல் நிலையம்

திண்டுக்கல் மாவட்டம், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சங்கர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் மதுரையில் இருந்து தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்துக் காத்திருந்தார். ஆனால், அவருக்கு பணியிட மாற்றம் கிடைக்காததால் விரக்தி அடைந்தார். இதனால் கடந்த சில தினங்களாகவே மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!

5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in